free on line job

வாழ்க்கைக்கு ஏற்ற பொன் மொழிகள்




                                                                    பொன் மொழிகள் ... 

பொன் மொழிகள் 1 ... 

படித்ததில் பிடித்தது...

பள்ளியில் ஜாதிசான்றிதழ் வாங்கிட்டு, “ஜாதிகள் இல்லையடி பாப்பாசொல்லும்போதே, படிப்புக்கும், வாழ்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிகின்றது..
பூஜையோ, ஜெபமோ, தொழுகையோ.. ஒரு பருக்கை சோற்றைக் கூட தராது.. உழைச்சா தான் சோறு..
ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண், அதை விட அழகாக தெரிவான்..
ஒரு பெண் உன்னிடம் தன் பிரச்சனையை சொல்கிறாள் என்றால், அதற்காக அவள், அவர்களை குறை கூறுகிறாள் என்று அர்த்தம் இல்லை.. உன்னை முழுமையான நம்புகிறாள் என்று அர்த்தம்..
ஒருவர் உங்களிடம் ஆறுதல் தேடிவரும் போது, அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு, பிறகு அவரை பற்றி மற்றவரிடம் குறை கூறினால், அதை விட நம்பிக்கை துரோகம் என்ன இருக்கு..
எழுதி வைத்துகொள்ளுங்கள், பல அடுக்கு மாடி கட்டிடங்களை இடித்து விவசாயம் செய்யும் நாள் வரும், வெகுவிரைவில்..
உயிரை கொடுத்தாலும் திரும்ப கிடைக்காதது, “நேரம்”.. அந்த நேரத்தை ஒருவருக்காக செலவழிக்கும் முன், அவர் அதற்கு தகுதியானவரா, என ஆராய்வது நல்லது..
சுதந்திரம் இல்லாத காலத்தில், வெள்ளைக்கார கவர்னர்களையேகூட எதிர்த்து தைரியமாக குரல்கொடுக்க முடிந்த நம்மால், சுதந்திரம் பெற்றபிறகு, ஒரு வார்டு கவுன்சிலரை பார்த்துக்கூட எதிர்த்துக்குரல் கொடுக்க முடியவில்லையே, ஏன்?
• “கவலைப்படாதேஎன்பதை விட, “நான் பார்த்துக்கிறேன்என்பதே, சிறந்த ஆறுதல்..
இன்று உன்னால் சிரித்தவர்கள், நாளை உனக்காக அழுதால், நீ வாழ்ந்த வாழ்கை அர்த்தமானது..
இறந்தவருக்கு சிலை வைப்பதற்கு பதிலாக, பசியோடு இருப்பவருக்கு, இலை வையுங்கள்..
• “ஏமாத்திட்டாங்களேன்னு வருத்தப்படாம, “இவர்களைப் போய் ஏமாத்திட்டோமேன்னு வருத்தப்பட வைக்கிற மாதிரி வாழனும்..
நம்ம கூட இருந்த ஒருத்தர், நமக்கு துரோகம் பண்ணிட்டாங்கன்னு, கூட இருக்க மத்த எல்லோரையும் சந்தேகப்பட்டா, வாழ்வில் நிம்மதி இருக்காது..
குத்திக்காட்டும் மனிதர்க்கும், சுட்டிக்காட்டும் மனிதர்க்கும், இடையில் சிரித்து செய்து வாழ்ந்தாலே, பெரும் சவால்..
அடுப்பு கல்லு உள்ளே இருந்தால், உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால், சாதா ஹோட்டல்.. இவ்வளவு தான் வாழ்கை..
தெருவில் கிடக்கும் காகிதமாக, யாரையும் வெறுக்காதே.. நாளை அது பட்டமாக பறந்தால், நீ அவர்களை நிமிர்ந்து பார்க்க நேரிடும்..
வாழ்க்கையில் எல்லாம் கிடைக்கும், என்று எதிர்பார்க்காதே.. சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே நல்லது..
உறவு என்பது ஒரு கோவில், அதற்குள் செல்லும் முன், “ஈகோஎனும் செருப்பை கழட்டிவைத்தல் நலம்.
நாம் தேடிச்செல்வோரை விட, நம்மை தேடி வருவோர் மீது அதிகம் அன்பையும் அக்கறையும் செலுத்துங்கள்..
வேலை செய்பவரின், பணம் தான் நம் கண்ணுக்கு தெரிகிறது.. அவர்களின் உழைப்பும், கஷ்டமும் நம் கண்ணுக்கு தெரிவதே இல்லை..
யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீகள்.. யாரோ ஒருவரால் நிராகரிப்பு, ஒருவரால் நேசிக்கப்படுகின்றது..
பயண இருக்கையிலும், வேலை நிறுவனங்களிலும் (அரசியல்) வயதானவர்களுக்கே முதலிடம்.. இளைஞர்களுக்கு இல்லை.



------------------------------------------------------------------------------------------------------------------------

பொன் மொழிகள் 2

* ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்; பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.
* மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்.
* அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழ வேண்டும்.
* உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்.
* கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
* நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
* அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
* மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.
* தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

* பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல - விவேகானந்தர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
பொன் மொழிகள் 2

--------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment