"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?" "இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே" "எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"
"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?" "நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."
"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?" "அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... "யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.." "ஏன்..?" "பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"
"பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்" "ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"
இரண்டாயிரங் காலத்துப் பயிர்
"போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்.."
"முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?" "டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"
"கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?" "ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"
"உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?" "அதனால உனக்கென்ன?" "நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"
"புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?" "தெரியலையே.." "புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்"
பிக்கப்
"எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?" "இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"
"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட 'செக்கப்' பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?" "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
காதலன்: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன். காதலி: அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா? காதலன்: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை... காதலி: !!!!
"பாத்திரத்துல உள்ள தண்ணியில் கையை நனைக்கச் சொல்றீங்களே ஏன்?" "எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.."
"லோன் செக்ஷனில் வேலை பார்க்கிறவரை மாத்திடணும் சார்.." "ஏன்..?" "எதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்"
பொறம்போக்கு
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூக்கினான். இது என்ன காலம்? மாணவி: கொசுவே இல்லாத காலம் சார்...!
லதா: எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு ஆனா சேமிப்பே இல்லை.. கீதா: என்ன வியாபாரம்? லதா: சேமியா வியாபாரம்.
"தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா? "ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."
நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...? நடிகை: அதெல்லாமில்லீங்க... இது 'கரைஞ்சதும்' வேற புது சோப் வாங்கிடுவேன்...!
"அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு." "எப்படி சொல்றீங்க?" "வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே."
No comments:
Post a Comment